2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கல்லடியில் பதற்றம்

Suganthini Ratnam   / 2017 மே 31 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கல்லடிப் பகுதியில் வீதியோர வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த வியாபாரிகளுக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது, அங்கு சிறிது பதற்ற நிலைமை ஏற்பட்டது.

கல்லடிப் பிரதான வீதியோரத்தில் மீன், மரக்கறி உள்ளிட்டவற்றை விற்பனை செய்துவரும் வியாபாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது, அங்கிருந்த பொதுமக்கள் சிலருக்கும் மட்டக்களப்பு மாநகரசபை உத்தியோகத்தர்களுக்கும் இடையில் வாய்த்தர்;க்கம் ஏற்பட்டதன் காரணமாக சிறிது பதற்ற நிலைமை ஏற்பட்டது.

ஏனைய பகுதிகளிலிருந்து இங்கு வருவோர் வியாபாரம் செய்கையில், இப்பகுதியிலுள்ளோர் வியாபாரம் செய்யும்போது மாத்திரம் மாநகரசபையினர் தடுப்பதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.

வீதியோரத்தில் வியாபார நடவடிக்கையை மேற்கொள்வதால், சிரமம் ஏற்படுவதாகவும் இதனால், கல்லடிப் பிரதான வீதியோரத்தில் வியாபார நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது  என  மட்டக்களப்பு மாநகரசபை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இந்த வீதியோரத்தில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

இதன் பின்னர், குறித்த வீதியோரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

இந்நிலையில், மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு கல்லடி மீன்சந்தையிலும் மரக்கறி மற்றும் பழ வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு மட்டக்களப்பு பொதுச் சந்தையிலும் வியாபாரத்தில் ஈடுபடுமாறு மாநகரசபை உத்தியோகத்தர்களால் பணிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .