2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

கலால்வரித் திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர்

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலால்வரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ஏ.போதரகம நியமிக்கப்பட்டுள்ளதுடன்,  அவர் நாளைய தினம் கடமைகளை பொறுப்பபேற்கவுள்ளதாக கலால்வரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஏ.போதரகம கடந்த 34 வருடங்களாக கலால்வரித் திணைக்களத்தில் கடமையாற்றி வருகின்றார்.

அம்பாறை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, கொழும்பு, களுத்துறை ஆகிய பிரதேசங்களில்  அவர் கடமையாற்றியுள்ளதுடன், 2016 ஆம் ஆண்டில் பதில் கலால்வரி ஆணையாளர் நாயகமாக பதவி வகித்துள்ளார்.

23 வருடங்களின் பின்னர், கலால்வரித் திணைக்களத்துக்கு ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X