Kogilavani / 2017 ஜூன் 02 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதற்காக, வங்கிக் கணக்கு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சீ.ஏ.மாரசிங்க, நேற்று (1) தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கான நிவாரண நிதியை வழங்க விரும்பும் பொதுமக்கள், இலங்கைவங்கியின் 80912312 என்ற கணக்கிலக்கத்துக்கு வைப்புச் செய்ய முடியும் என தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஒருமாத அடிப்படைச் சம்பளமான 54 ஆயிரத்து 285 ரூபாயை, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த யோசனை, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை, நாடாளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டது. இருப்பினும், குறித்த யோசனைக்கு சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள்” என்ற நம்பிக்கை உள்ளதாக, பேராசிரியர் சீ.ஏ. மாரசிங்க தெரிவித்தார்.
எனினும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு, தங்களுடைய ஒரு மாதச் சம்பளத்தை வழங்குமாறு, பொது அமைப்பொன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரிடமும் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தது. அந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து, சபாநாயகர் கரு ஜயசூரிய மட்டுமே, எழுத்து மூலமாக உறுதியளித்துள்ளதாக அறியமுடிகிறது.
8 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
3 hours ago