2021 மார்ச் 08, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் நாளையும் எதிர்ப்பு நடவடிக்கை

Yuganthini   / 2017 ஜூலை 24 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்  
யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான தாக்குதலைக் கண்டித்து, கிளிநொச்சி சந்தையைப் பூட்டி, எதிர்ப்பு நடவடிக்கையொன்று நாளை (25) மேற்கொள்ளப்படவுள்ளது.  

கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணம் - நல்லூர் பின் வீதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த, நீதிபதியின் மெய்ப்பாதுகாப்பாளருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.  

கிளிநொச்சி சேவைச் சந்தையின் அனைத்து வியாபார நிலையங்களும், இன்றைய தினம் பூட்டப்பட்டு, இவ்வெதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என, கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .