2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் மலசலகூட குழியிலிருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Super User   / 2010 மே 30 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, கணேசபுரம் பகுதியிலுள்ள   வீடொன்றின் மலசலகூடக் குழியில் போடப்பட்டிருந்த நிலையில் மனித எலும்புக்கூடுகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

மீள்குடியேறிய நிலையில் குறித்த வீட்டுக்குச் சென்றுள்ள அந்த வீட்டின் உரிமையாளர் தமது வீட்டு மலசலகூடக் குழியைத் துப்பரவு செய்தபோது, அதனுள் பொலித்தீனில் சுற்றப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட சடலங்களை அவதானித்துள்ளார்.
 
இது குறித்து கிராம சேவையாளர் மூலமாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் எஸ்.சிவகுமாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் நீதவான் முன்னிலையில் சடலங்களைத் தோண்டி எடுப்பதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .