சுஜிதா / 2017 ஜூன் 14 , பி.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை - பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்துக்கு அருகே, பாரிய குளவிக் கூடு, கலையும் நிலையில் காணப்பட்டதால், மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, இன்று காலை 10 மணியுடன் பாடசாலையில் கற்றல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன், பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியோடு, பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகளை, காலை 10 மணியுடன் நிறைவுக்குக் கொண்டு வந்ததாக, அவர் மேலும் கூறினர்.
குறித்தப் பாடசாலையில் காணப்படும் அனர்த்த முகாமைத்துவக் குழுவின் ஒத்துழைப்போடு, சகல பெற்றோருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டு சகல மாணவர்களும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பெற்றோரைக் கொண்டு குளவிக் கூடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
இன்று இடைநிறுத்தப்பட்ட கற்றல் நடவடிக்கைகள், சனிக்கிழமை இடம்பெறும் என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025