2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண சபை மட்டு.மாவட்ட உறுப்பினர் பதவி சுழற்சி முறையில்

Super User   / 2010 மே 23 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகாண சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவி சுழற்சி முறையில் பகிரப்படவுள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் முதல் 15 மாதங்களுக்கு வாழைச்சேனையைச் சேர்ந்த இஸ்மாயில் ஹாஜியாரும் அடுத்த 15 மாதங்களுக்கு மீராவோடை புர்கானும் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடனான கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபையை பிரதிநித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஹசன் அலி மற்றும் தவிசாளார் பஷீர் சேகுதாவூத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

எனினும் வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகண சபையின் எதிர்க் கட்சித்தலைவர் பதவிக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

  Comments - 0

  • nuah Monday, 24 May 2010 09:09 PM

    இது கேலிக்கூத்தான செயல், இவர்கள் எவ்வாறு நியாயமான ஒரு தீர்வுத்திட்டத்தை நாடு முழுவதற்குமாக பரிந்துரை செய்வார்கள்? பதவி சண்டை போட்டுக்கொண்டு ஒற்றுமை இல்லாமல் கோர்ட்டுக்கு போய்க்கொண்டு இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை மீண்டும் அரச கட்சியினர் வலியுறுத்தலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--