2025 ஜூலை 12, சனிக்கிழமை

கிராண்ட்பாஸில் கொள்கலன் விபத்து; கொழும்பு-கண்டி வீதியில் வாகன நெரிசல்

Super User   / 2010 ஜூன் 11 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் கொள்கலனொன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள இலங்கை மின்சார சபையின் மதில் சுவரில் மோதியதை அடுத்தே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதனால் குறித்த மதில் சுவர் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி பஞ்சு ஏற்றி வந்த கொள்கலன், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது மின்சார சபையின் மதில் சுவரில் மோதி குடைசாய்ந்துள்ளது. 

இதனால் கொழும்பு-கண்டி வீதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குடைசாய்ந்துள்ள கொள்கலனை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .