2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கைவிடப்பட்ட யாழ். மாநகரசபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

Super User   / 2010 மே 11 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாநகரசபை பிரதி மேயர் இளங்கோ (றேகன்) கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து மாநகர சபை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மாநகரசபை  மேயர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரின் பணிப்பின் பேரிலேயே இந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதவான் கே.பிரபாகரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் யாழ் மாநகர சபையின் பிரதி மேயரும் ஈ.பி.டி.பி.யின் முக்கியஸ்தருமான றேகன் என்றழைக்கப்படும் இளங்கோ கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண நீதவான் ஏ.ஆனந்தராஜா முன் ஆஜர் செய்யப்பட்ட இவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
இந்நிலையில் யாழ்.மாநகரசபையின் பிரதி மேயர் கைது செய்யப்பட்டுள்ளமையைக் கண்டித்து இன்று பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெற்றது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--