2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

கொகா-கோலா நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இரத்து

Gavitha   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி ஆற்றில் எண்ணெய் கசிவு கலப்பது தொடர்பில் பியகம கொகா-கோலா நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தினை சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைக்களம், தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளாதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாவும் மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் லால் மர்வின் தர்மசிறி தெரிவித்தார்.

மீண்டும் அந்நிறுவனம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நீண்ட மற்றும் குறுகிய கால திட்டம் ஒன்றை ஏற்படுத்தி கொடுப்பதற்கு திணைக்கள அதிகாரிகள் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அதற்கிணங்க முதலில் குறுகிய மற்றும் தற்காலிக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும்  அந்நிபந்தனைக்குட்பட்டு சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதானால் அதற்கிணங்க அனுமதிப்பத்திரத்தினை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

களனி கங்கையில் கலக்கப்பட்ட எண்ணெய் கசிவுகள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் அதற்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .