2025 ஜூலை 12, சனிக்கிழமை

கோடி ரூபாய் பெறுமதியான பாபுல் கைப்பற்றல்

Menaka Mookandi   / 2016 மார்ச் 17 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும், போதைப்பொருள் கலக்கப்பட்ட பாபுல்களை, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான இந்த பாபுல், மாலைதீவு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குவைட் ஆகிய நாடுகளிலிருந்தே கொண்டுவரப்பட்டுள்ளது என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களை இலக்கு வைத்தே, போதைப்பொருள் கலக்கப்பட்ட பாபுல்கள், இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் பாலித மஹிபால கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .