2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கான்ஸ்டபிள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு

Kanagaraj   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரோந்து சென்ற கான்ஸ்டபிள் இருவர் மீது, இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் அவ்விரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டான கடியல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் மீதே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில், கான்ஸ்டபிள் ஒருவரின் ரிவோல்வரை கைப்பற்றி, அந்த கான்ஸ்டபிள் மீதும்; அவருடைய உதவியாளரான மற்றுமொரு கான்ஸ்டபிள் மீதுமே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பின்னர், துப்பாக்கி தாரிகள், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து, அதிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னர், மோட்டார் சைக்கிளையும் கடத்திச் சென்றுவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .