2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

சகல வேட்பாளர்களும் ஆணைக்குழுவுக்கு அழைப்பு

Editorial   / 2019 நவம்பர் 14 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று (14) அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன்ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் அல்லது வேட்பாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர், இந்தக் கலந்துரையாடலில்  பங்குபற்றமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் எவ்வாறான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பில் இங்கு தௌிவுபடுத்தப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .