2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

சஜித்துடன் இணைந்தார் றவூப்

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


சமகி ஜன பலவேகய அமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டு ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியக் கட்சி என்ற வகையில்,  எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் தலைமையிலான குழுவினருடன் இணைந்து செயற்படவுள்ளதாக அவர் கூறினார்.

உண்மையான தேசிய ஒற்றுமையை பேணுவதற்கான உருவாக்கப்பட்ட கூட்டணியாக,  சமகி ஜன பலவேகய அமைப்பை குறிப்பிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .