2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

சட்டவிரோத ஆயுர்வேத மசாஜ் நிலையம் இயங்குவதாக பொலிஸில் முறைப்பாடு

Super User   / 2010 மே 24 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள்  இயங்கிவருவதாக மிரிஹானப் பொலிஸாரிடம், ஆயுர்வேதத் திணைக்களம் முறைப்பாடு செய்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் ரமனி குணவர்த்தன, மேற்படி ஆயுர்வேத மசாஜ் நிலையங்களனாது  உரிமப் பத்திரங்கள் எதுவுமின்றி  சட்டவிரோதமாக இயங்கிவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

15 ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் மாத்திரமே உரிமப் பத்திரங்களைப் பெற்று  செயற்பட்டு வருவதாகவும் ரமனி குணவர்த்தன குறிப்பிட்டார். மேலும்,  பல ஆயுர்வேத நிலையங்கள் உரிமப் பத்திரங்கள் எதுவுமின்றி சட்டவிரோதமாக செயற்படுவதாக கூறிய அவர், இதில் 50 ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் உரிமப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்திருந்தபோதிலும், அவை நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும்  தெரிவித்தார்.

இந்நிலையில், சட்டவிரோதமாக செயற்படும் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை கண்டுப்பிடிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்படிருப்பதுடன், மேற்படி நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரமனி குணவர்த்தன குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்குட்பட்ட நபர்களின் பின்னணியிலேயே சில ஆயுர்வேத நிலையங்கள் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.   Comments - 0

 • divakar Monday, 31 May 2010 07:59 PM

  இது ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் அல்ல. இவை பெண்களை விற்பனை செய்யும் நிலையங்கள். இவற்றுக்கு போன அனுபவம் உள்ள ஒரு நண்பருடன் கலந்துரையாடி உள்ளேன்.

  Reply : 0       0

  xlntgson Tuesday, 25 May 2010 09:00 PM

  நவ யுவதியர் எனப்படும் பதின்மூன்று வயது தொடக்கம் பருவ எழுச்சிக்கு ஆளான சில ஆண் பெண் பிள்ளைகளினாலே இவ்வாறான காதல் குழந்தைகளுக்கு பெற்றோராக நேரிடுகிறது என்று இது போன்ற முந்தைய சம்பவங்களில் இருந்து தெரிய வருகிறது, இவர்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பவர்களும் 'கூடாது' என்பவர்களும் சமமான கருத்து மோதலில் இருக்கின்றனர், இதை சொல்லிக்கொடுக்க ஆசிரியர் தேடுவதும் மிகக் கடினம் அதை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் மிக மோசமாக கேலி நையாண்டிக்குள்ளாகி மதிப்பை இழக்கநேரிடும்.

  Reply : 0       0

  xlntgson Tuesday, 25 May 2010 10:27 PM

  சட்ட சட்டவிரோதம் எல்லாம் அந்தந்த காலப்பகுதியில் அந்தந்த அரச ஆதரவில் இயங்குவதில் தான் இருக்கிறது. எதிரி என்று சந்தேகப்பட்டால் கூட பொய் வழக்கு போட்டே வாழ்க்கையை நாசமாக்கிவிடுவர். ஊழல் அதிகாரிகளை வைத்துக்கொண்டு எந்த ஓட்டையை அடைக்க இயலும் இந்த ஓட்டையை அடைக்க? ஆயுர்வேத மசாஜோ சும்மா மசாஜோ இதெல்லாம் கெமரா வைத்தா பார்க்க முடியும். வளர்ந்த மனிதர்களின் தனிமனித உரிமை இரகசியம் என்ன ஆவது? பொலீஸ் இம்மாதிரியான விடயங்களில் சமுதாய நலன் நோக்கில் துணிந்து செயல்படுவதில்லை, அவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதே!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .