Editorial / 2020 ஜனவரி 16 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கீழக்கரையில் தங்கி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட இலங்கை நபரை சிறையில் அடைக்க உத்திடப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்தவர் முகமது ரிபாஸ் (36). இவர் 2004ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து வேலை நிமித்தமாக டுபாய் சென்றார்.
அங்கிருந்து 2009ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் சென்னை வந்து ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார்.
கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த ரோஷன் சல்மா என்பவரை 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது 4 குழந்தைகள் உள்ளன. கீழக்கரையில் குடும்பத்துடன் வசித்து வந்தார் முகமது ரிபாஸ். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் போதைப்பொருள் கடத்தியதாக இவர் உள்பட 4 பேரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2019 ஏப்ரலில் இவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து வாட்ஸ் அப் குரூப் தொடங்கி இஸ்லாத்திற்கு ஆதரவாகவும், இஸ்லாம் அல்லாதோருக்கு எதிராகவும் பிரசாரம் செய்வதுடன், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை கொலை செய்யவும் திட்டம் தீட்டி வந்தனர்.
இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் குற்றங்கள் புரிந்த முகமது ரிபாஸ், வெளிநாடுகளில் வேலை நிமித்தமாத ஆட்களை சட்ட விரோதமாக அனுப்பி வந்தார்.
இதனையடுத்து இவரிடமிருந்து அமைதி மற்றும் நன்னடத்தை உறுதிமொழி ஆவணம் பெறப்பட்டது.
உறுதிமொழி ஆவணத்தை மறைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு மூலம் , வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு சலுகைகளைப் பெற்றார்.
இது குறித்து காஞ்சிரங்குடி வி.ஏ.ஓ., கீழக்கரை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, நன்னடத்தை பிணைய காலமான 2022 நவம்பர் 19 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க கீழக்கரை தாசில்தார் வீரராஜ் உத்தரவிட்டுள்ளார்.
7 minute ago
14 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
18 minute ago