Yuganthini / 2017 ஜூலை 17 , மு.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்ட ஆட்சி மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தை ஸ்தாபித்தல் ஆகியனவற்றுக்காக இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை வரவேற்பதாக, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) அமைப்பின் பிரதான செயலாளர் அம்ஜாட் ஹூசேன், பீ.சிசில் தெரிவித்துள்ளார்.
சார்க் அமைப்பின் பிரதான செயலாளர் அம்ஜாட் ஹுஸைன் பீ.சியாலுக்கும், நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சட்ட ஆட்சி மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தை நிலை நாட்டுவதற்காக, இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை தான் மதிப்பதாகவும் நீதிமன்றத் தொகுதியைப் பலப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் மகிழ்ச்சியளிப்பதாகவும், அம்ஜாட் ஹுஸைன் பீ.சியால், இந்தச் சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய இலங்கை அரசாங்கமானது, நாட்டுக்குள் இன மற்றும் மதங்களுக்கு இடையில் சகவாழ்வை உருவாக்குவதற்காக எடுத்துள்ள செயற்பாடுகளை தான் மதிப்பதாகவும், இந்தச் சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டுள்ளதாக, நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் நீதிமன்றத் துறையை, பிராந்திய மட்டத்தில் அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது என்றும், நீதியமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
14 minute ago
31 minute ago
34 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
34 minute ago
52 minute ago