2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு அழைப்பு

Editorial   / 2020 ஜனவரி 05 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களையும் எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அன்று இடம்பெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சி போட்டியிடும் முறை, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தம் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

அத்துடன்,  அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் குழுவொன்றை அமைக்குமாறு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆலோசனை  குறித்த முன்னேற்றம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .