Editorial / 2018 மார்ச் 19 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியில் இடம்பெற்ற அமைதியற்ற சூழலின் போது சேதமடைந்த வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கான முதற்கட்ட நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கும் திட்டம், இன்று (19) ஆரம்பமாகவுள்ளது.
மேற்படிக் கொடுப்பனவை வழங்குவமற்கான மதிப்பீடு நடவடிக்கைகள் அனைத்தும், வெள்ளிக்கிழமையுடன் (16) நிறைவடைந்த நிலையில், இன்று முதல், நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படுமென, கண்டி மாவட்டச் செயலாளர் எச்.எம்.பிஹிட்டிசேகர தெரிவித்தார்.
புன்ர்வாழ்வு அமைச்சினால், இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. அந்த வகையில், 50 ஆயிரம் ரூபாய் முதல், 1 இலட்சம் ரூபாய் வரையான கொடுப்பனவு, இன்று முதல் வழங்கப்படவுள்ளது.
கண்டியில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, 470 வீடுகளும் 24க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
50 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
8 hours ago
9 hours ago