Gavitha / 2016 மார்ச் 31 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி, கராப்பிட்டிய வைத்திய வித்தியாலயத்துக்கு அண்மையில், மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தின் மீது, மிளகாய்த் தூள் கரைத்து வீசப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாதவர்களே, மிளகாய்த் தூளைக் கரைத்து வைத்திருந்த போத்தலை, சத்தியாக்கிரகக் கூடாரத்தின் மீது வீசியெறிந்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்று, வைத்தியபீட மாணவர் செயற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
மாலபேயில் களவாகப் பட்டம் வழங்குவதாகவும் அச்செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியும், கல்வியை விற்பனை செய்வதாகவும் அச்செயற்பாட்டையும் உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியும் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம், அவ்விடத்தில் கடந்த 70 நாட்களாக முன்னெடுக்கப்படுகின்றது.
56 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
57 minute ago