2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

சந்திரிகாவின் கூட்டத்தில் பதற்றம்

Editorial   / 2019 நவம்பர் 09 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஸீன் ரஸ்மின்)

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவுக்கோரி புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் நேற்று(08) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்துகொண்டிருந்தார்.

சந்திரிக்கா உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த 'க்ளீன் புத்தளம்' அமைப்பின் உறுப்பினர்கள் அறுவக்காலு குப்பை விவகாரம் தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றநிலை உருவாகியது.

குப்பைத் திட்டம் தொடர்பில் ஒரு உறுதியான முடிவைத் தமக்கு வழங்கினால், சஜித் பிரேமதாசவுக்கு முழுமையான  ஆதரவு வழங்கி அவருடைய வெற்றிக்காக பாடுபடுவோம் என்றும் இல்லாவிடின் எவருக்கும் வாக்களிக்கப்போவதில்லை எனவும் 'க்ளீன் புத்தளம்' அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்தத் திட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் இதற்கான உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .