2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

சீனத்தொழிலாளரின் வருகைக்கு இருதரப்பு ஒப்பந்தமே காரணம் - கெஹெலிய

Super User   / 2010 ஜூன் 22 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும்,சீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தொழிலாளர்கள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில்  கெஹெலிய ரம்புக்வெல்ல கலந்துகொண்டார்.

ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் இலங்கை தொழிலாளர்களுக்கு ஏன் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

ஒப்பந்தங்களின் அடிப்படையில் எல்லாமே எமக்கு மாத்திரம் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல இங்கு பதிலளித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--