2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

செம்மொழி மாநாடு; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு; கண்காணிப்பில் சிறியரக விமானம்

Super User   / 2010 ஜூன் 13 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி கோவையில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 10ஆயிரம் பொலிஸாரும், 1,000 ஊர்க்காவற் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தியாவிலேயே முதன்முறையாக உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு புதியவிதமான பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, கமரா பொருத்தப்பட்ட ஆள் இல்லாத சிறிய ரக விமானத்தை (யு.ஏ.வி.) சுமார் 15 கிலோமீற்றர் தூரத்துக்கு பறக்கவிட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளன.

2 1/2 கிலோ நிறையுள்ள இந்த சிறிய ரக விமானம் மின்கலத்தினால் இயங்கக்கூடிய வகையிலும் 1 1/2 மணிநேரம் தொடர்ந்து மேலே பறந்து கமரா மூலம் படம்பிடித்து உடனுக்குடன் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .