2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சமையல் எரிவாயு 190 ரூபாயால் உயர்வு

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமையல் எரிவாயுவின் விலையை 190 ரூபாயால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில், வாழ்க்கை செலவுகள் குழு முன்வைத்த யோசனை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (18) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சமையல் எரிவாயுவின் விலையை 190 ரூபாயால் அதிகரிக்கவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதை காரணம் காட்டி., சமையல் எரிவாயு நிறுவனங்கள், விலையை அதிகரிக்க கோரி வாழ்க்கைச் செலவுகள் குழுவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--