2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சமல் ராஜபக்ஷ அவுட்: மஹிந்தவுக்கு வாய்ப்பு

Gavitha   / 2016 ஜூலை 20 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவராக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவை நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக, முன்னாள் சபாநாயகரும் எம்.பியுமான சமல் ராஜபக்ஷவே நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும், இவ்வாண்டு நடத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திக் குழுவின் கடந்த இரண்டு கூட்டங்களிலுமே, சமல் ராஜபக்ஷ பங்கேற்கவில்லை.

ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனத்தை அவர், ஏற்றுக்கொள்ளாததன் காரணமாகவே, அப்பதவிக்கு அமைச்சர் மஹிந்த அமரவீரவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X