2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

செயலாளர் சரணடைந்தார்

Gavitha   / 2020 மார்ச் 11 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும்,  அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகள்  குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ல் கே வீரசிங்க, கொழும்பு நிரந்தர ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தில், இன்று (11) சரணடைந்தார்.

அவருக்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த பிடியாணையை அடுத்தே, சட்டதரணியூடாக, அவர் சரணடைந்தார்.

இதன்போது, அலி ரொஷான் என்று அழைக்கப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 8 பிரதிவாதிகள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள உயர் நீதிமன்ற வழக்கு தொடர்புடைய தேவையற்ற ஆவணங்களை ஒப்படைப்பதற்கு, தன்னுடைய பிரதிவாதி தயாராக இருப்பதாக, சட்டதரணி தெரிவித்திருந்தார்.

அதன்படி, செயலாளருக்கு விடுக்கப்பட்டிருந்த பிடியாணையை வாபஸ் பெற்ற நீதிமன்றம், குறித்த ஆவணங்கள் அனைத்தையும் நாளை (12) சேகரிக்குமாறு, குற்றப்புலனாய்வு துறைக்கு உத்தரவிட்டது.

அலி ரொஷான் என்று அழைக்கப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 8 பிரதிவாதிகள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள உயர் நீதிமன்ற வழக்கு தொடர்புடைய தேவையற்ற ஆவணங்களை ஒப்படைக்குமாறு, குறித்த ஆணைக்குழுவின் தலைவர்,  உபாலி அபேரட்ண, உத்தரவிட்டிருந்த நிலையிலேயே, இவர் நேற்று மாலை சரணடைந்தார்.  

நல்லாட்சி அரசாங்கத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, இன்று (11), பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போதே, குறித்த ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபேரட்ணவால், ஆணைக்குழுவின் செயலாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  

முன்னதாக, உயர்நீதிமன்ற வழக்கின் ஒரு பிரதிவாதியான கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற முன்னாள் நீதவான் திலின கமகே, அனுமதியின்றி யானையொன்றை தன் வசம் வைத்திருந்ததாக தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு காரணமாக, தான் அரசயில் ரீதியாக பழிவாங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, இந்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும், சட்டமா அதிபரைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஆணைக்குழுவுக்கு வருகை தந்திருந்த மேலதிக சொலிசிட்டர்  ஜெனரல் சரத் ஜெயமன்னே, சட்டமா அதிபருக்கு அழைப்பாணை விடுப்பதன் மூலம், ஆணையகம் சட்ட விதிமுறைகளை மீற முயல்வதாக கூறியிருந்தார்.

அத்துடன், நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கு, தற்போது இறுதி கட்ட நடவடிக்கையில் உள்ளது என்றும் எனினும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலையீடு காரணமாக, வழக்கின் நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபேரட்ண, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்த முந்தைய அதிகாரிகள், இந்த விவகாரத்தில் ஆணைக்குழுவுக்கு தேவையற்ற ஆவணங்களையும் வழங்கியுள்னர் என்றும் இதனால், ஆணைக்குழுவில் குழப்பமான ஆவணக்கோப்புகள் அதிகரித்துவிட்டன என்றும் கூறியிருந்தார்.

“இந்த வழக்குடன் தொடர்புடையது என்று கூறப்படும் தேவையற்ற ஆவணங்களை ஏன் சேர்த்துக்கொண்டார்கள் என்றும் அதை ஏன் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளனர் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் வினவவேண்டும். ஆணைக்குழுவின் கேள்விகளைக் கேட்பதற்கு முன்னர், குற்றப்புலாய்வு திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராகவே, சட்டமா அதிபர் திணைக்களம் செயற்டவேண்டும்” என்று இதன்போது ஆணைக்குழு ​தலைவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .