Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kamal / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாதமலையின் பெயர் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அறிக்கையொன்றை கோரியுள்ளதாக தெரிவிக்கும், நுவரெலியா மாவட்டச் செயலாளர் எம்.பி.ஆர். புஸ்பகுமார, இது குறித்து ஆராயுமாறு பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டார்.
அண்மையில் “சிவனொளிபாத மலை“ என்று பெயர் பொறிக்கப்ட்டிருந்த தூண் அகற்றப்பட்டு “ஸ்ரீ கௌதம புத்தரின் பாதஸ்தானம்“ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தூண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
எனவே, மேற்படி சம்பவம் குறித்து அமைச்சர் மனோ கணேசன் தன்னிடத்தில் அறிக்கை கோரியுள்ளதாகவும், அது குறித்த அறிக்கையொன்றினை தமக்கு சமர்பிக்குமாறு பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago