2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல்: விசாரணைகள் தீவிரம்

Kamal   / 2019 நவம்பர் 30 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

​அதற்கமைய, மேற்படி விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு அவசியமான ஆவணங்களை சுவிஸ் தூரகத்திடமிருந்து, பொலிஸ் தலைமையகம் கோரியுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல்களை இலங்கைக்கான சுவிஸ் தூதுவரிடத்திலும் அறிவித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய நேற்று (29) சுவிஸ்லாந்து தூதரகம் சில தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ​ பெற்றுகொடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

இந்த விசாரணைகளில் குற்றப்புலனாய்வு திணைகளத்துக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கான பொலிஸ் நெருக்கமான புகைப்பட கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்கள் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் என கூறியிருந்தாவும், ஆரம்பக கட்ட விசாரணைகளின் போது, அது உண்மைக்கு புறம்பானதென அறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .