2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

'சு.க ஒழுக்காற்றை எதிர்த்து வழக்குப் போடுவேன்'

Thipaan   / 2016 மார்ச் 22 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கொழும்பு-02, ஹைட்பார்க் மைதானத்தில் கூட்டு எதிரணி நடத்திய எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக, அக்கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அதற்கெதிராக, நான் வழக்குப் போடுவேன்' என்று பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில

தெரிவித்தார். ஹைட்பார்க் மைதானத்தில் நடத்திய எதிர்ப்புக் கூட்டத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 46 பேர் பங்கேற்றனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநித்துவப்படுத்தி, நாடாளுமன்றத்தில் 85 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

பெரும்பான்மையைக் கொண்ட குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக, கட்சியினால் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுக்கவேண்டுமாயின், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளருக்கு எதிராகவே ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X