2021 ஜனவரி 23, சனிக்கிழமை

சாதகமான சூழல் உருவாகிறது: சிங்கப்பூரில் பிரதமர் ரணில் தெரிவிப்பு

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையும் இந்தியாவும் சிங்கப்பூரும், முத்தரப்பு வேலைத்திட்டத்துக்குள் இணைய முடியும் என்றும் அதில், சகல தரப்பினரும் வெற்றியீட்டக்கூடிய சாதகமான சூழல் உருவாக்கிக்கொண்டுவருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பின் பேரில் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெற்காசிய கற்கை நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, தெற்காசிய புலம்பெயர்ந்தோரின் 3ஆவது மாநாடு, சிங்கப்பூர் ருல்ஸ் நகர மண்டபத்தில், திங்கட்கிழமை (18) ஆரம்பமாகி இன்று செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகின்றது.

அம்மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சீபா ஒப்பந்தம், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான எட்னா ஒப்பந்தம் மற்றும் இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்த ஒப்பந்தம் ஆகியவற்றினால் அடுத்தவருடத்தில் முத்தரப்பு வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளவேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை, பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டத்துக்கு மிகவும் உச்சமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .