2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சீனப் பிரஜை கைது

Yuganthini   / 2017 மே 21 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருதொகை வௌிநாட்டு நாணயங்களுடன் சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு வந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சுங்க பிரதிப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் வசம் இருந்து 24,500 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவற்றின் பெறுமதி 37 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்திருந்தமையும், அவர் சவுதி அரேபிய நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றுவதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X