2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

சேயாவை நானே கொன்றேன்: கொண்டையாவின் சகோதரர்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமியை தானே கொலை செய்ததாக கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்தவின் மூத்த சகோதரர் ஒத்துக்கொண்டார் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

சேயா சந்தவமியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்த மற்றும் அவரது அண்ணா ஆகிய இருவரும் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போதே, கொண்டையா, நீதவானிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தின் பாதுகாப்பு வழமையை விடவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .