2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவில் அசாத் சாலி வாக்குமூலம்

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையாகியுள்ளார்.

ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு அமைய  இன்று (08) காலை 9 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிலுள்ள பொலிஸ் பிரிவு்ககு சென்ற அசாத் சாலி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் அக்மீமன தயாரத்ன தேரரும் ஆணைக்குழுவுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 47 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியளித்துள்ளதுடன்,மேலும், 317 பேர் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .