2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 ஜூன் 23 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகத் தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்தே, விசேட பாதுகாப்பு வழங்குமாறும் கொழும்பு நீதிவான் நீதிமன்றம்  தெரிவித்தது.

ஜெனரல் சரத் பொன்சேகா 'ஹைகோப்' ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலான  வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதன்போதே, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது.

மேலும், ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--