Kanagaraj / 2016 ஜூலை 09 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருநாட்டு மீனவர்களது, 4ஆம் கட்ட பேச்சுவார்த்தையை நடாத்துவதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தாங்கள் சந்திக்க வேண்டும் என்று வடபகுதி மீனவர்கள் கோரிக்ககையை விடுத்துள்ளனர்.
தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவது உள்ளிட்ட
வடபகுதி மீனவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாகவே இவ்விருவருடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, வடப்பகுதி மீனவ கூட்டுறவு சங்க தலைவரும் இலங்கை மீனவப்பிரதிநிதிகள் குழுவின் அங்கத்துவருமான வி.பொன்னம்பலம் இலங்கை-இந்திய மீனவ நலன்புரி அமைப்பின் ஆலோசகரும் மீன்பிடிதுறை அமைச்சின் விசேட செயலனி குழு அங்கத்தவருமான எஸ்.பி.அந்தோனிமுத்துவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்;விடயம் சம்பந்தமாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கவனத்துக்குகொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அந்தோனிமுத்து, எதிர்வரும் புதன்கிழமைக்குள் உரிய பதில் கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025