2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

ஞானசாரரை கொல்ல முயற்சி

Editorial   / 2017 ஜூன் 01 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார ​தேரரை படுகொலை செய்வதற்கு முயற்சிப்பதாக, குற்றத்தடுப்புப் பிரிவு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு, நேற்று (31) அறிக்கையிட்டது. 

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் சிலர், ஞானசாரதேரரை படுகொலை செய்துவிட்டு, நாட்டில் மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு முயற்சிப்பதாக, முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது. 

பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் திலன்ன குமார வித்தானகே, பொலிஸ்மா அதிபரிடம் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய, அந்த விசாரணை குற்றத்தடுப்பு பிரிவுக்கு ஒப்​படைக்கப்பட்டிருந்தது. 

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களினால், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்துக்கு அமைவாக, இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களினால் 2015ஆம் ஆண்டு, இந்த விவகாரம் தொடர்பில் நீதவானிடம் அளிக்கப்பட்ட இரகசிய வாக்குமூலத்திலும் மேற்கண்ட விவகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .