2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

தகவலுக்கான உரிமை சட்டமூலம் சமர்ப்பிப்பு

Thipaan   / 2016 மார்ச் 24 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

தகவலுக்கான உரிமை சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (24) நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அரசாங்க முதற்கோலாசானுமான கயந்த கருணாதிலக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. 

நாடாளுமன்றம் நேற்று, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னரே இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. 

இதன்போது எழுந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர திஸாநாயக்க, இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது. 

இதேவேளை, மாகாண சபைகளில் சமரப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் எமக்குக் கிடைத்தால் மிகவும் நல்லது. அவற்றை வைத்துக்கொண்டு விவாதிக்க முடியும் என்றார். 

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இரண்டொரு வாரங்களில், அவற்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X