2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

தப்பியோடினாரா ரவீந்திர விஜேகுணரத்ன; அரசாங்கம் விளக்கம்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படையின் முன்னாள் தளபதியும் பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதானியுமான ரவீந்திர விஜேகுணரத்ன நாட்டை விட்டு தப்பியோடவில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற மெக்ஸிகோவின் தேசிய தினத்தில் இலங்கை சார்பில் கலந்துக்கொள்வதற்காகவே அவர் மெக்ஸிகோ சென்றிருப்பதாகவும் அமைச்சர் சமரசிங்க  மேலும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, நாட்டைவிட்டுத் தப்பியோட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை எனவும், எந்தவிதமான சவால்களுக்கும் அவர் முகங்கொடுக்க தயாராகவே இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

டார்வில் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .