2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பு யசூஷி அகாஷியுடன் இன்று பேச்சுவார்த்தை

Super User   / 2010 ஜூன் 18 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று சற்று முன்னர் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது,  தமிழ் மக்களின் மீள்குடியேற்றம்,  மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான விபரத்தை வெளியிட அரசை வலியுறுத்தல் போன்றவை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஜப்பானிய அரசின் நிதி முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் எனவும் ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வு எட்பட ஜப்பனியா அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்ததாக  செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் நன்மதிப்பை பெறவேண்டுமானல் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அத்தோடு அரசியல் தீர்வு ஒன்றை வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யசூஷி அகாஷி தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு  தெரிவித்தார்.

மேலும், நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கும் போது நீங்கள் முன் வைத்த கோரிக்கைகளை அவரிடம் தெரிவிப்பதாக யசூஷி அகாஷி குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், டி.சுமந்திரன், சரவணபவன், வினோ நோதிலிங்கம் மற்றும் சின்னத்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--