2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

தேயிலைத் தோட்டத்தில் இராட்சத முதலை

Editorial   / 2017 ஜூன் 06 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

15 அடியை விடவும் நீளமான,  இராட்சத முதலையொன்று மாத்தறை, அக்குரஸ்ஸ திப்படுவாவ பிரதேசத்தில்  பிடிக்கப்பட்டுள்ளது.

தேயிலைத் தோட்டத்தில் நேற்று மாலை 2 மணியளவில் பெண்ணொருவர் கொழுந்து பறித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது, இறப்பர் போன்றதொரு பொருள், அவரது காலில் மிதிபட்டுள்ளது.

அதனை உணர்ந்த அப்பெண், என்னவென்று உற்றுப் பார்த்தபோது, அது இறப்பர் அல்ல, முதலை என்பதைக் கண்டுகொண்டார்.

அது தொடர்பில் அரவமின்றி ஊரிலுள்ள  மக்களிடம் அப்பெண் தெரிவித்துள்ளார்.  இதனை அடுத்து, அது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னரே, வனஜீவராசி திணைக்களத்தைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் இணைந்து அந்த முதலையைப் பிடித்து, பாதுகாப்பான இடத்தில் விடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில், இந்த முதலை, தேயிலைத் தோட்டத்துக்குள் ஒதுங்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .