2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

திருகோணமலையில் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்ற உத்தரவு

Super User   / 2010 மே 20 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தின் எல்லைக் கிராமங்களான படுக்காடு, முதலைமடு, ஒட்டு ஆகிய  பகுதிகளில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின்  1100 காணிகளில் அத்துமீறி குடியேறி உள்ள வெளியாட்டகளை உடனடியாக வெளியேற்றுமாறு திருகோணமலை மாவட்ட செயலாளர் மூதூர் மற்றும் சேருநுவர பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலாளர் தலமையில் மூதூர் மற்றும் சேருநுவர பிரதேச செயலாளர்களின் பங்குபற்றலுடன் சேருநுவர பிரதேச செயலகத்தில் உயர்மட்ட சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தங்களது பாரம்பரிய காணிகளில் வெளியாட்டகள் அத்துமீறி குடியேறியிருப்பதாகவும்,  இவர்களை வெளியேற்றி தங்களின் காணிகளை பெற்றுத்தருமாறு திருகோணமலை மாவட்ட செயலாளரிடம் வேண்டியிருந்தனர்.

இதற்கிணங்க திருகோணமலை மாவட்ட செயலாளர் இன்று நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பிலேயே அத்துமீறி குடியேறி உள்ளவர்களை  வெளியேற்றுமாறு  உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், தேவைப்படின் பொலிஸாரின் உதவியைப் பெறுமாறும் அவர் குறிப்பிட்டார்.(R.A)
  Comments - 0

 • KONESWARANSARO Friday, 21 May 2010 03:48 PM

  சரியான நடவடிக்கை. வரவேற்கிறோம். அரச அதிகாரிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்க இப்படியான நடவடிக்கைகள் உதவும்.

  Reply : 0       0

  vijayan Friday, 21 May 2010 09:03 PM

  சாபம் விடாது.
  அப்பாவித்தமிழரின் சாபம் சும்மாவிடாது.
  இவர்களுக்கு சாபவிமோசனமே கிடையாது.
  பாவம் சில நல்ல மனம்கொண்ட சிங்களவர்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--