Editorial / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தான் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்று கூறியே தனது அப்பா திட்டுவதாக தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ எம்.பி, அரசியல் காரணங்களுக்காக ஒருபோதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னை திட்டியது கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்துக்கு எதிரான ‘ஜனபலய’ எதிர்ப்பு போராட்டம் எதிர்பார்த்த அளவில் ஒன்றிணைந்த எதிரணிக்கு வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த எதிர்ப்பு போராட்டத்தின் முழுப் பொறுப்பும் நாமல் ராஜபக்ஷ எம்.பியிடமே வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த போராட்டம் வெற்றியளிக்கவில்லை என்பதால், உங்களது தந்தை (முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ) திட்டினாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே நாமல் எம்.பி மேற்கண்டவாறு பதிலளித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலியே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2 hours ago
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025