2025 ஜூலை 03, வியாழக்கிழமை

திருமலை கடலை மாசுபடுத்திய துருக்கிய கப்பல் மாலுமிக்கு ரூ.ஒரு கோடி அபராதம்

Super User   / 2010 ஜூன் 03 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கடற்பரப்பை மாசுபடுத்தியதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து துருக்கி கப்பலொன்றின் மாலுமியொருவருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ஒரு கோடி ரூபாவினை அபராதமாக விதித்தது.

கடலில் சல்பூரிக் அமிலத்தைக் கொட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு இந்த அபராதத்தினை விதிக்க நீதிவான் தீபாலி விஜேசுந்தர உத்தரவிட்டார்.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 முதல் 9ஆம் திகதிக்கிடைப்பட்ட காலப்பகுதியிலேயே குறித்த கப்பலின் மாலுமியான சர் சிதத் என்பவர் மேற்படி அமிலத்தினை கடலில் கொட்டியுள்ளார் என்று விசாரணைகளின் மூலம் நிரூபனமாகியுள்ளது.

இந்நிலையில் அவருக்கு ஒரு கோடி ரூபாவினை அபராதமாக விதித்த நீதிமன்றம் அந்த பணத்தினை ஹொங்கொங் அன்ட் ஷங்காய் வங்கியில் வைப்பிலிடுமாறும் உத்தரவிட்டார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .