2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

தற்போதைய அரசியல் சூழ்நிலையை ஆராய ஸ்ரீ.ல.சு கட்சி தீர்மானம்

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை ஆராய்ந்து, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை திட்டமிட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (18) இரவு நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அரசியல் சபைக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதித் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி எடுத்த தீர்மானத்துக்கு அப்பால், ஏனைய வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த தொகுதி அமைப்பாளர்களை நீக்குவதற்கும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்காக, கட்சியின் உப தலைவர், ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தலைமையில், தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .