2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

தற்கொலை குண்டுதாரிகளின் ஆடைகள், சினைப்பர் மீட்பு: ஞானசார தேரர்

Kanagaraj   / 2015 நவம்பர் 24 , பி.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாமிவேல் சுதர்ஷினி

தெஹிவளை, கௌடான பிரதேசத்திலிருந்து, தற்கொலைக் குண்டுதாரிகள் பயன்படுத்தும் உடைகளையும் சினைப்பர் கைப்பற்றிய குற்றப்புலனாய்வு பிரிவினர், அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் கைது செய்திருந்தனர். எனினும் இது தொடர்பில், எந்தவொரு தகவலையும் அரசாங்கம்  வெளியிடவில்லை என்று பொதுபலசேனா குற்றஞ்சாட்டியுள்ளது.

கிருலப்பனையில் அமைந்துள்ள பொது பல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

'தெஹிவளை, கௌடான பிரதேசத்தில், முஸ்லிம் குழுவொன்று, பெரும்பான்மை இனத்தவரின் வீடொன்றை வாடகைக்குப் பெற்று அங்கு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவினர் அப்பகுதியில் திடீர் சோதனையை மேற்கொண்டிருந்த போது, அங்கு தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்தும் உடைகள் மற்றும் சினைப்பர் ஆகியவற்றை மீட்டிருந்தனர். மேலும், முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் கைது செய்திருந்தனர்.

குறித்த இருவருக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம். ஆனால், இது குறித்த எந்தவித தகவலையையும் அரசாங்கம் ஊடகங்களுக்கு அறிவிக்கவில்லை' என்று அவர் குற்றஞ்சாட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X