2021 ஜனவரி 27, புதன்கிழமை

திலீபனின் நினைவுத்தூபி உடைப்பு;ஆனந்தசங்கரி கண்டனம்

Super User   / 2010 மார்ச் 25 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கண்டம் வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயேஅவர்  தனது இவ்வாறு கண்டனத்தை தெரிவித்தார்.

திலீபன் ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து தீவிரமாகப் போராடியவர் ஆவார். இந்த நிலையில் தமிழ் மக்களின் கனவு, இலட்சியம் நிறைவேறவேண்டுமானால் அதற்கு சரியான வழி தந்தை செல்வா, அமரர் அமீர் போன்றோர் உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் அகிம்சை ரீதியான போராட்டமே சரி என திலீபன் உணர்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்  எனவும் வீ.ஆனந்தசங்கரி கூறினார்.

அவ்வாறான இலட்சியத்தைக் கொண்டவர்களின் நினைவுத்தூபியை உடைப்பது என்பது  மன்னிக்கமுடியாத செயல் எனவும் வீ.ஆனந்தசங்கரி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .