Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 11 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு இந்தியா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தனது கருத்துகளுக்கு செவிசாய்க்காவிட்டால், வடக்கில் தீவிர போக்குடைய தலைமைத்துமொன்று உருவாகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய லோக்சாபா விடுத்திருந்த அழைப்பின் பேரில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழு, இந்தியாவுக்குச் சென்றுள்ளது.
அக்குழுவில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், நிமல் சிறிபால டீ சில்வா, மனோ கணேசன், கயந்த கருணாதிலக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜித்த ஹேரத் ஆகியோர் அடங்கியுள்ளனர்.
அக்குழுவினர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (10) சந்தித்தனர். இதன்போதே, சம்பந்தன், மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
“தற்போதிக்கும் அரசமைப்பில் தமிழர்களும் இந்த நாட்டவரென உணர்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றன. நாம் இலங்கையராக ஒன்றிணைய விரும்புகின்றோம். அந்த வாய்ப்பை மறுக்கும் வகையிலேயே தற்போதைய அரசமைப்பு அமைந்துள்ளது” என்று சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அதனாலேயே, புதிய அரசமைப்பின் நாடி நிற்கிறோம். புதிய அரசமைப்பின் உருவாக்கத்துக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதன் ஊடாகவே இலங்கை தமிழர்கள் நல்வாழ்வு வாழ முடியும். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தால் இலங்கையில் அராஜகம் ஏற்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பை விடவும் தீவிரமான போக்குடைய தமிழ்த் தலைமைகள் உருவாகக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது எனத் தெரிவித்துள்ள அவர், வயது முதிர்ந்த நிலையில் நான் இருக்கிறேன். இன்று எனது கருத்தை ஏற்காவிட்டால் என்னால் சமாளிக்க முடியாத புதிய போக்கு வடக்கில் ஏற்படும் என்ற அச்சம் தனக்கு உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“2014 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமராக தெரிவான உங்களுக்கு நாம் பெரும் தொல்லைகளை கொடுக்கவில்லை. நீங்கள், இலங்கைக்கு இருமுறைகள் வந்த போதும் உங்களிடம் மேற்படி கோரிக்கைகளை விடுத்திருந்தோம். புதிய அரசமைப்புக்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம்” என்றார்.
“இந்தியாவிலிருக்கக் கூடிய இலங்கையர்கள் மீண்டும் இலங்கை வருவதற்கான வழிமுறைகளையும் நீங்கள் செய்ய வேண்டும் எனவும் சம்பந்தன் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago