Gavitha / 2016 மார்ச் 03 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலது காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக, பேராதனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் இடது காலை அறுவை சிகிச்சை செய்த சம்பவம் நேற்று புதன்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.
பிலிமத்தலாவையைச் சேர்ந்த குறித்த சிறுமி, கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகளை மேற்கொண்ட வைத்தியர்கள் அவருடைய வலது காலை, மார்ச் 01ஆம் திகதி அறுவை சிகிச்சை செய்வதற்கு தீர்மானித்திருந்தனர். குறித்த சிறுமியை பரிசோதனை செய்த சிறப்பு வைத்தியர் பயிற்சி ஒன்றின் நிமித்தம் வெளிநாட்டுக்குச் சென்றதனால், அவருக்கு பதிலாக வேறொரு வைத்தியரே இந்த சிகிச்சையை செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026