Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kanagaraj / 2016 மே 23 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் யாவும், உடன் அமுலுக்கு வரும் வகையில், அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில், நேற்றுத் திங்கட்கிழமை மாலை கூடியது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதனோடு தொடர்புடைய அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படை முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கூட்டம் தொடர்பில், ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அனர்த்தங்களுக்குள்ளான பகுதிகளில் இடம்பெறக்கூடிய திருட்டுச் சம்பவங்கள் மற்றும் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், உயர் பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்த நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில், இன்றிலிருந்து, தாழ் நிலங்களில் மண் நிரப்பி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்தோடி வரும் நிலையில், மக்கள் முகங்கொடுக்கும் டெங்கு போன்ற நோய்களைத் தடுப்பது குறித்தும் அவதானம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி இதன் போது மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றம், புதன்கிழமை அவசரமாக கூடவிருக்கிறது.
நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வானது, மே மாதம் 20ஆம் திகதியன்று, ஜூன் மாதம் 7ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
7 hours ago