2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி முக்கிய அறிவித்தல்

Editorial   / 2020 மார்ச் 16 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள இன்று (16) பொதுமக்கள் முடிந்தளவு வீட்டிலேயே இருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


'இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ, பொது இடங்களில் கூடவோ வேண்டாம். கட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுங்கள். உங்களையும் ஏனையோரையும் பாதுகாக்கவும்' என, ஜனாதிபதி தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .